• Home
  • About
    • Thamiziniyan photo

      Thamiziniyan

      INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict. now @vikatan views are personal.

    • Learn More
    • Twitter
    • Facebook
    • Instagram
    • Github
  • Posts
    • All Posts
    • All Tags
  • Tags

ஆலன் டூரிங் – உன்னதங்களைக் கனவு கண்டவன்

30 Jun 2018

Reading time ~2 minutes

கணினிகளே முழுமையாக உருவாக்கப்படாத காலத்தில், நவீன கணினிகளைக் கனவு கண்டு கட்டமைத்தவன், இரண்டாம் உலகப் போரை சில ஆண்டுகள் முன்பாக முடித்து வைத்தவன். யார் இந்த ஆலன் டூரிங்? ஏன் நவீன கணினியியலின் காலத்தில் அவன் முக்கியமானவன்?

ஜெர்மானியர்கள் போர் தொடர்பாகப் பயன்படுத்திய ரகசிய/குறியீட்டுத் தகவல் பரிமாற்றங்களை பிரிட்டிஷார் கண்டறிந்ததால் மட்டுமே இரண்டாம் உலகப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்தது எனச் சில போர் வரலாற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஜெர்மானியர்களின் தாக்குதல் திட்டங்கள், இடங்கள், தாக்குதலுக்கான நேரம் போன்றவற்றை அவர்கள் குறியீடாக்கம் செய்யப்பட்ட தகவல்களாகப் பரிமாறிக்கொள்ள `எனிக்மா’ எனும் கருவியைப் பயன்படுத்தினார்கள். எனிக்மாவில் ஓர் எழுத்தை அழுத்தும் போது அது மேலே வேறு ஓர் எழுத்தாக ஒளிரும். நாம் பரிமாற விரும்பும் தகவலை எனிக்மாவில் உள்ளிடும் போது அந்தத் தகவல் வேறு ஒரு வாக்கியமாக வெளியாகும். தகவலை அனுப்புபவர் இப்படிக் குறியீடாக்கம் செய்த செய்தியை அனுப்பிவிடுவார், இந்தச் செய்தியை வழக்கம்போல எதிரிகளால் இடைமறித்துத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், ஒளிந்திருக்கும் அந்தத் தகவலை உடைக்கவே முடியாது.

ஜெர்மானியர்களின் இந்த `எனிக்மா’ உடைக்கவே முடியாத பெர்லின் சுவர் போல கருதப்பட்டது. (பெர்லின் சுவர் காலத்தால் எனிக்மாவுக்குப் பிந்தையது, வாக்கிய அழகுக்காக மட்டுமே இது.) எனிக்மா முதல் பெர்லின் சுவர் வரை ஜெர்மானியர்களின் வலுவானவை உடைக்கப்பட்டதுதானே வரலாறு. இதனை உடைப்பதற்காகவே தனியாக ஒரு துறை, பல துறைசார் வல்லுநர்கள் என ஆங்கிலேயர்கள் பதறியடித்துக்கொண்டிருந்தார்கள்.

எனிக்மாவை மிகச்சுலபமாக உடைக்கும் வழிமுறைகளை செயல்படுத்தியவர்களில் “ஆலன் டூரிங்” முக்கியமான கணிதவியலாளர். ஆலன் டூரிங்கின் பிறந்த தினம் இன்று. கணிதவியலில் பெரும் புகழ்பெற்றவராக விளங்கிய டூரிங் கணினியியலின் பிதாமகனாக மாறிப்போனார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான `த இமிடேஷன் கேம்’ (The Imitation Game) திரைப்படத்தில் ஆலன் டூரிங் வாழ்க்கையும் எனிக்மா இயந்திரம் பற்றிய இந்த அத்தியாயமும் இடம்பெற்றிருக்கும்.

அறுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு `Computing Machinery and Intelligence’ என ஓர் ஆய்வுத்தாளை சமர்ப்பிக்கிறார் “ஆலன் டூரிங்” (Alan Turing). அந்த ஆய்வுத் தாளில் அவர் ஒரு கேள்வியை முதல் பத்தியில் வைக்கிறார். அந்தக் கேள்விக்கான பதிலை கண் முன்னே பார்க்கும் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாம். அந்தக் கேள்விக்குச் செல்வதற்கு முன்பாக டூரிங் பற்றியும், அவருடைய முக்கியப் பங்களிப்பு பற்றியும் மேலும் சில தகவல்களையும் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். அந்தளவுக்குப் பொறுமை இல்லை, கேள்வி என்னன்னு சொல்லுன்னு கேட்பவர்களுக்கான ஒரு சின்ன க்ளூ… சமீபத்தில் ஒரு வீடியோவில் உச்சரிக்கப்பட்ட “mmm… hmm…” என்ற வார்த்தைகள்.

ஆலன் டூரிங் கண்ட கனவும், கேட்ட கேள்வியும்தான். இப்போதுதான் அது வடிவம் பெற தொடங்கியிருக்கிறது, அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றான “டூரிங் சோதனை” (Turing Test) முன்பை விட இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


கணினிகளே முழுமையாக உருவாக்கப்படாத காலத்தில், நவீன கணினிகளைக் கனவு கண்டு கட்டமைத்தவன், இரண்டாம் உலகப் போரை சில ஆண்டுகள் முன்பாக முடித்து வைத்தவன். யார் இந்த ஆலன் டூரிங்? ஏன் நவீன கணினியியலின் காலத்தில் அவன் முக்கியமானவன்?

முழு கட்டுரையை விகடன் தளத்தில்  “I am not a robot” – நம்மை இப்படித் தினம் தினம் நிரூபிக்க வைத்த ஆலன் டூரிங்கைத் தெரியுமா?  படிக்கலாம்.



AIenigmaTuring testஆலன் டூரிங் Share Tweet +1
Creative Commons Licence
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License