• Home
  • About
    • Thamiziniyan photo

      Thamiziniyan

      INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict. now @vikatan views are personal.

    • Learn More
    • Twitter
    • Facebook
    • Instagram
    • Github
  • Posts
    • All Posts
    • All Tags
  • Tags

The shawshank redemption

19 Sep 2009

Reading time ~2 minutes

சுவர்களும் இருட்டும் எப்போதுமே கொடுமையானவை, தனிமை விரும்பிகளுக்குக் கூட கொடுமையானது சிறைச்சாலை சுவர்கள். அந்த சிறைச்சாலை சுவர்களுக்குள் அடைக்கப்படும் மணிதன் ஒருவனுக்கு வழங்கப்படும் அல்லது எடுக்கப்படும் மீட்பு நடவடிக்கைதான் The Shawshank Redemption. சில சினிமாக்கள் நம்மை அதன் போக்கோடு இழுத்துச் செல்லும். சில சினிமாக்கள் நம்மை துரத்தியணுப்பிவிடும்.சில முடிந்தவுடன் நம்மோடே பல நாட்கள் பயணிக்கும். சில சினிமாக்கள்,திரையில் ஒரு கதாபாத்திரம் அழுதால் நம்மை அழவைத்து, சிரித்தால் சிரிக்கவைத்து, நம்மை பாதிக்கும், இதுவும் அந்த வகை சினிமா தான்.
தன் மனைவி,தன் நண்பனுடன் தொடர்பு கொண்டிருப்பாளேயானால் ஒரு கனவன் என்ன செய்வானோ அதைத்தான் நாயகனும் செய்கிறான். அதற்காக அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தான் அந்தக் கொலைகளைச் செய்யவே இல்லை தான் ஒரு அம்மாஞ்சி என்கிறான் அவன். நீ அம்மாஞ்சியோ இல்லை அப்பாவியோ அதெல்லாம் தெரியாது உனக்கு இரட்டை ஆயுள்தணடனை அவ்ளோதான்.
சிறைக்குச் செல்கிறான், நான் நல்லவன் நான் வீட்டுக்குப் போவனும், நான் வீட்டுக்குப் போவனும் என்று சப்பாணி கணக்காக அழும் ஒரு குண்டனுக்கு நேரும் கதியைப் பார்த்து மௌனமாகிறான். காலையில் எழுந்து இரவில் உறங்கி மீண்டும் காலையில் எழுந்திருக்கும் ஒரு அற்புதமான நாளில் சிறையில் இருக்கும் இன்னொரு பெரிய தலையோடு பழகுகிறான். அந்த தலை, சிறைச்சாலைச் சுவர்களுக்குள் வியாபாரம் செய்யும் ஒரு மறைமுக வியாபாரி. அவனிடம் இவன் ஒரு மிகச்சிறிய பொருளை எனக்கு வரவைத்து தர முடியுமா எனக் கேட்கிறான். அந்த பொருளை வைத்து “நீஅந்த வேலையைச் செய்யனும்னா600வருஷம் ஆகும்” என்று கூறிவிட்டு வாங்கிதருகிறான். அந்த தலை மட்டும் தான் அந்தச் சிறையில் இருக்கும் ஒரே குற்றவாளி, மற்றவர்கள் அனைவரும் அம்மாஞ்சிகள் தான்.
அந்த சிறை வார்டனுக்கு கட்டாயம் எல்லா கைதிகளும் பைபிள் படிக்க வேண்டும். அது அவர்களை பரிசுத்தமாக்கும். இன்னொரு வயது முதிர்ந்த கைதி, சிறை நூலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பாளர், அந்த சிறையை விட்டுப் பிரிய மனமில்லாமல் சிறைக்குள்ளேயே ஒரு கொலை செய்யுமளவிற்கு அவர் அந்தச் சிறையோடு ஒன்றிப்போயிருக்கிறார். இன்னொரு கும்பல் இருக்கிறது, காமக் கொடூரக் கும்பல்.
நம்ம ஹீரோவுக்கு ஒரு துறையில் பழம் தின்று கொட்டை போடுமளவுக்கு அணுபவம். ஆனால் பழம் தின்று முடித்தவுடனேயே சிறையில் போட்டுவிடுகிறார்கள், கொட்டை போட முடியவில்லை. அந்த அனுபவம் அவனுக்கு சில வசதிகளை அளிக்கிறது கூடவே ஆப்பும். அவனுக்கு ஒரு விநோத பழக்கம் இருக்கிறது, சின்னச் சிறு கற்களை எடுத்து இழைத்து இழைத்து சிற்பம் செய்வது. கூடவே ஒரு சினிமா நடிகையின் மீதான காதல் அவள் புகைப்படத்தின் கண்முன்னால் விழிப்பது வரை அவனை இழுத்து விடுகிறது, மெல்ல மெல்ல காலம் ஓடுகிறது, நடிகைகளும் மாறுகிறார்கள் அவர்களின் படங்களும் மாறுகிறது, ஆனால் அதே சிறை அதே கைதிகள்,சில புதிய கைதிகள்.
அப்படி ஒரு புதிய கைதி வருகிறான். அவன் ஹீரோ குரூப்போடு சேருகிறான். அவனுக்கு படிக்கச் சொல்லி கொடுக்கிறான் ஹீரோ. (ஹீரோவுக்கு கிடைக்கும் வசதிகளில் ஒன்று நூலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு) அந்த புதிய கைதியின் மூலமாக அவன் உண்மையிலேயே அம்மாஞ்சிதான் என நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் மரத்தடியில் ரசித்தபடி முதல் மிடறு காப்பியை குடிக்கப் போகும் போது மரத்திலிருந்து காக்கை சரியாக குறிபார்த்து காப்பியில் எச்சம் போட்டதைப் போல ஆகிவிடுகிறது. அவனுக்கு மீட்பு கிடைக்காமல் போய்விடுகிறது, அவன் எப்படி மீட்கப்படுகிறான் என்பதுதான் மீதிக்கதை.
அவன் சிறைக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பதைக் காட்ட பயண்படுத்தப்படும் நாட்காட்டி அந்த பெருந்தலைதான், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அவர் வெளியே செல்ல வாய்ப்பு வழங்கப்பட விசாரிக்கப்பவதும். மீண்டும் அடைக்கப்படுவதுமாய் இறுதியில் அவர் பேசும் வசணங்கள் ஆர்ப்பாட்டமில்லாத களேபரங்கள், ”நானும் இந்தச் சிறையோடு ஒன்றிப்போய்விட்டேன்,” ”இந்தச் சிறையில் இருக்கும் ஒரே குற்றவாளி நான்தான்”, “………………. So, I’m here” ,மணுஷனாய்யா இவரு?இவர் கூட நடிக்க மத்தவங்க எல்லாம் எப்படிதான் ஒத்துக்குறாங்கன்னு தெரியல, மத்தவங்க எல்லாம் இவருக்கு முன்னாடி காணாம போயிடராங்க.
தன்னம்பிக்கையை ஊட்டும் தலை சிறந்த படைப்பாக இந்தப் படத்தைக் கூறலாம்.


திரைப்படம் Share Tweet +1
Creative Commons Licence
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License